பனாமா அரசுத் தலைவர் யுவான் கார்லோஸ்
திருத்தந்தையின் வருகை பனாமா நாட்டுக்குக் கிடைத்த பெரும் பேறு - அரசுத்தலைவர்
- Author Fr.Gnani Raj Lazar --
- Sunday, 03 Feb, 2019
திருத்தந்தையின் வருகை பனாமா நாட்டுக்குக் கிடைத்த பெரும்பேறு - அரசுத்தலைவர்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை பனாமா நாட்டில் வரவேற்பது, அந்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சிதரும் செய்தி மட்டுமல்ல; அது தங்களுக்குக் கிடைத்த மாபெரும் பெருமை என்று பனாமா அரசுத் தலைவர், யுவான் கார்லோஸ் வரேலா ரொட்ரிகுவெஸ் கூறியுள்ளார்.
விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் வாழும், சிறு நாடான பனாமா நாட்டு மக்களிடம், உலக இளையோர் நாள் நிகழ்வுகளை நடத்தும்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்படைத்தது, தங்களுக்குக் கிடைத்த பெரும் பேறு என்றும் அரசுத்தலைவர் ரொட்ரிகுவெஸ் குறிப்பிட்டார்.
பனாமா நாட்டில், முதல் கத்தோலிக்க மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் 500 ஆம் ஆண்டைச் சிறப்பிக்க, 2009 ஆம் ஆண்டு முதலே தயாரிப்புகள் இடம்பெற்றுவரும் வேளையில், திருத்தந்தை தற்போது வரவிருப்பது, பெரும்
மகிழ்ச்சி தரும் நற்செய்தி! உலக இளையோர் நாள் நிகழ்வுகளை நடத்துவதன் வழியே, நாடு களுக்கிடையிலும், கலாச்சாரங்களுக்கிடையிலும் மீண்டும் ஒருமுறை பாலமாகச் செயல்படும் வாய்ப்பு, பனாமாவுக்குக் கிடைத்துள்ளது என்பதை, அரசுத்
தலைவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
“நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக். 1:38)” என்ற அன்னை மரியின் சொற்கள், 34வது உலக இளையோர் நாளின் தலைப்பாகும்.
Comment